Wednesday, September 28, 2016

கவிதை 4:
" மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் " 

விளக்கம்:
மரம் ஏறுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு அறியாத வகையில்
மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில்
வண்டுகளும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் மலர்ந்த, தீயைப்
போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆகிய குளிர்ச்சி
பொருந்திய பெரிய மாலையைத் தலையில் சூடும் கண்ணியாக அணிந்த
திருமுடியை உடையவன் 
திருமுருகப்பெருமான் ..."

Maksud: 

Kalung bunga yang dipakai oleh tuhan muruga sangat unik dan ia tidak mudah diperoleh.


No comments:

Post a Comment