" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - - - - - - 1
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ... " - - - - - - 3
விளக்கம்:
உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும்
மகிழுமாறு உதித்தெழுந்து [மகாமேரு
மலையை]
வலம் வருவதும்,
பலராலும் புகழப்படுவதுமான
ஞாயிறு [கதிரவன்], கிழக்குக்கடலில்
தோன்றுவதைப்போன்று, தம்
கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள்
மீதும் செலுத்தாமல்
கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு
இறையருளில் மூழ்கியுள்ள
பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம்
புறக்கண்களால்
நோக்கும்
பக்தர்களுக்குத் தொலைவில் நின்று
விளங்குவதுமான இயற்கைப்
பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."
Maksud :
Tuhan murugan akan menyelesaikan semua masala yang melanda kita jika kita sembayang beliau dengan penuh hati.
Tuhan murugan akan menyelesaikan semua masala yang melanda kita jika kita sembayang beliau dengan penuh hati.
No comments:
Post a Comment